“சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்?” - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் #RahulGandhi கண்டனம்!
சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பரோனி ரயில் நிலையத்தில் நேற்று (நவ.9) லக்னோ-பரோனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, எஞ்சினுடன் இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது இரண்டுக்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பாலியானார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளதார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
“ஒரு அதானியை பாதுகாப்பதிலேயே பிஸியாக இருக்கும் பிரதமர் மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? ரயில்வே துறையின் அலட்சியம், வேண்டுமென்றே குறைந்த அளவில் ஆட்சேர்ப்பு உள்ளிட்டவற்றின் விளைவுதான் இந்த நிலைக்கு காரணம்"
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.