“சிறுவயதில் எங்களிடம் ஸ்கை டிவி இல்லை” - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
தனது சிறுவயதில் அனுபவிக்க வேண்டிய பல விஷயங்களை அனுபவிக்க தவறியதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் பிரதமராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி சுனக். இவர் பிரிட்டனின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். ரிஷி சுனக்கின் குடும்பத்தினர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்த இவரின் குடும்பத்தினர் 1960 ஆம் ஆண்டுகளில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரிஷியின் அப்பா ஒரு இந்தியராவார். ஆனால், ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவராவார். இவர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தாலும், இந்திய கலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர்.
ஜூலையில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரிஷி சுனக், தனது சிறுவயதில் நிறைய விஷயங்களை இழந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். எப்போதாவது எதாவது இல்லாமல் நீங்கள் இருந்திருக்கிறீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நான் சிறுவயதாக இருந்தபோதே எனது பெற்றோர்கள் இங்கு இடம்பெயர்ந்தனர். கடின உழைப்போடும், மதிப்புடனும் வளர்க்கப்பட்டோம்” என தெரிவித்தார்.
மீண்டும், சிறுவயதில் எது இல்லாமல் போனது? எவற்றையெல்லாம் தியாகம் செய்தீர்கள்? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் சிறுவயதில் நிறைய தியாகம் செய்துள்ளோம். சிறுவயதில் நாம் அனுபவிக்க வேண்டிய சிறுசிறு விஷயங்களை கூட தியாகம் செய்தோம். எடுத்துக்காட்டாக கூற வேண்டுமானால் ஸ்கை டிவி. அதனைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. காரணம், நாங்கள் படிக்க வேண்டும் என்பதை எங்கள் பெற்றோர் விரும்பினர்.