Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துபாயிலிருந்து இந்தியா திரும்புவது எப்போது? ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ் உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

05:49 PM Nov 03, 2023 IST | Web Editor
Advertisement

ஆரூத்ரா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான
ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10ஆம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்ப உள்ளதாக
சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம்
முதலீட்டாளர்களிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக
புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்ற
தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது
வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர்,
தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவராக உள்ள ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பிருப்பதாக தகவலை சேகரித்தது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்துசெய்யக் கோரி,  ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு
நிலுவையில் உள்ளது.

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேசுக்கு எதிராக சென்னை மத்திய
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீசும் பிறப்பித்தனர். இந்த
நோட்டீசை திரும்ப பெற உத்தரவிடக்கோரி மற்றொரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக
மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும், ஆரூத்ரா மோசாடிக்கும் தமக்கும்
தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில், நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே நாடு திரும்பியதும் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, டிசம்பர் 10ஆம் தேதி
ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாகவும், இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல்
செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நவம்பர் 8 தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags :
Aarudhra Gold TradingChandrakanthChennaiDubaiMadras High Courtnews7 tamilNews7 Tamil Updatesrk sureshscamTN Police
Advertisement
Next Article