Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெளியான அசத்தல் அப்டேட்!

05:13 PM Dec 28, 2024 IST | Web Editor
Advertisement

வாடிவாசல் படப்பிடிப்பு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கூறியுள்ளார்.

Advertisement

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடிகர், சூர்யா நடித்து முடித்துள்ளார் . இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அடுத்தாக, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.நடிகர், சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.

இந்நிலையில், வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான பணிகளை லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனிமேஷன் இறுதிக்கட்டத்தில் உள்ளன, என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு கூறினார்.

Tags :
cinemaNews7 Tamil UpdatesNews7TamilSuriyavaadivasalVetri Maaran
Advertisement
Next Article