Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் எப்போது? வெளியான அப்டேட்!

அனுபமா பரமேஸ்வரனின் 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
09:05 PM Nov 26, 2025 IST | Web Editor
அனுபமா பரமேஸ்வரனின் 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
Advertisement

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன், தனது 19 வயதில் 'பிரேமம்' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் 'மேரி'யாக அவர் நடித்த கேரக்டர் சிறியதாக இருந்தாலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தின் மூலம் அவருக்கு புதிய வாய்ப்புக்ளும் கிடைத்தன. அந்த வகையில், அவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். தொடர்ந்து, டிராகன், பைசன் காளமாடன் ஆகிய படங்களில் நடித்தார். இப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

Advertisement

இதனிடையே, நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் திரைப்படம் 'லாக் டவுன்'. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் 'கனா' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'லாக் டவுன்' படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Anupama Parameswarancinemalock downLock Down Trailermovie updateTrailer
Advertisement
Next Article