‘ஏஸ்’ படத்தின் டிரெய்லர் எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மகாராஜா’ மற்றும் ’விடுதலை – 2’ ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து, அவர் இயக்குநர் மிஷ்கினின் ‘டிரெயின்’ படத்தில் நடித்து வருகிறார். இதறகிடையே, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்கு ‘ஏஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மணி வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
The GALATTA MAXX trailer of #ACE movie trailer drops this May 11th🔥#ACETrailer #ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat @andrews_avinash @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir… pic.twitter.com/NXGUH6Zbqv
— VijaySethupathi (@VijaySethuOffl) May 9, 2025
இப்படம் மே 23ம் வெளியாக உள்ளதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (மே 11) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.