Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'டென் ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்!

09:20 PM Jan 08, 2025 IST | Web Editor
Advertisement

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார்.

Advertisement

பொங்கல் ரேஸில் இருந்து 'விடாமுயற்சி' திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கவுள்ளன. இதில் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' திரைப்படமும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இதில் சிபி சத்யராஜ் உடன் ராஜ் அய்யப்பா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'டென் ஹவர்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார் என சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Tags :
Director Lokesh KanagarajNews7Tamilnews7TamilUpdatesSibi SathyarajTen HoursThangadurai
Advertisement
Next Article