Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’இந்தியன் 3’ படப்பிடிப்பு எப்போது? - லேட்டஸ்ட் அப்டேட்!

01:08 PM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

இந்தியன்-2 திரைப்படத்தை தொடர்ந்து இந்தியன்-3 திரைப்படமும் வரும்  என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Advertisement

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் எனவே ’இந்தியன் 3’ படமும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஷங்கரின் இந்த கருத்தை கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதாகவும் இதையடுத்து அவர் கூடுதலாக 40 நாட்கள் ’இந்தியன் 3’ திரைப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா பகுதிகளில் ’இந்தியன்3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் ’இந்தியன் 2’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமும் ’இந்தியன் 3’ திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Next Article