For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மறுமணம் எப்போது? நடிகை சமந்தா சொன்ன பதில்!

02:40 PM Dec 18, 2023 IST | Web Editor
மறுமணம் எப்போது  நடிகை சமந்தா சொன்ன பதில்
Advertisement

மறுமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதையும் படியுங்கள்:  “தென் மாவட்டங்களில் கனமழை தொடரும்” – பாலச்சந்திரன் கொடுத்த ஷாக்!

சமந்தா 2 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா 2021-ல் விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் மறுமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

அதில், "மறுமணம் ஒரு தவறான முடிவாகிவிடுமென புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார்.  அதனுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை பதிவிட்டுள்ளார்.  அத்துடன் 2023 விவாகரத்து தொடர்பான புள்ளி விவரத்தையும் சமந்தா இணைத்து பதிலளித்துள்ளார்.

அந்த புள்ளி விவரத்தில் முதல் திருமணங்கள் 50 சதவீதம் விவாகரத்தில் முடிவதையும், 2வது திருமணங்கள் 67 சதவீதம் மற்றும் 3வது திருமணங்கள் 73 சதவீதம் விவாகரத்தில் முடிவதாக தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement