For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Karthi | ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

02:05 PM Oct 06, 2024 IST | Web Editor
 karthi   ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது  வெளியான புதிய தகவல்
Advertisement

கார்த்தியின் வா வாத்தியார் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் கடந்த செப்.27ஆம் தேதி வெளியான மெய்யழகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இவரின் 26வது படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வா வாத்தியார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தை வரும் கிறிஸ்துமஸ் (டிச.26) அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement