Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது..? - புதிய அப்டேட்..!

06:59 AM Feb 02, 2024 IST | Jeni
Advertisement

ஸ்குவிட் கேம் சீசன் 2 இந்தாண்டு நிச்சயம் வெளியாகும் என்று நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. 

Advertisement

உலகளவில் தென்கொரிய நாடகங்கள், தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்குவிட் கேம்’, பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருந்த இந்த தொடர், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் Player 001 என்ற மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த 77 வயதான ஓ யங்-சு, கோல்டன் குளோப் விருது பெற்று, மேலும் இந்த தொடரை பிரபலப்படுத்தினார்.

லீ ஜங் ஜே, பார்க் ஹே சூ, வி ஹா ஜூன், காங் யூ உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த தொடரின் 2வது சீசன், எப்போது வரும் என்று ரசிகர்கள் பேராவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இதனிடையே ‘ஸ்குவிட் கேம்’, தொடரை அடிப்படையாகக் கொண்டு ரியாலிட்டி ஷோ ஒன்றை நெட்ஃபிளிக்ஸ் நடத்தியது. ஆனால் நினைத்த அளவு இந்த ஷோ வரவேற்பைப் பெறவில்லை.  ‘ஸ்குவிட் கேம்’ இணையத் தொடரின் சீசன் 2 எப்போது வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இதையும் படியுங்கள் : மத்திய பட்ஜெட் தாக்கல் – தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு!

இதனைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் சீசன் 2 க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை முன்னதாக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது. இந்நிலையில், ஸ்குவிட் கேம் சீசன் 2-ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. லீ ஜே ஜங், காங் யூ, லீ பியுங் ஹுன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள போஸ்டர்களை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு நிச்சயம் ஸ்குவிட் கேம் சீசன் 2 வெளியாகும் என்றும் அறிவிப்பை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. ரிலீஸ் தேதி மற்றும் மாதம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
GongYooKDramakoreaKoreanSeriesKSeriesLeeByungHunLeeJungJaeNetflixSeriesSquidGame2SquidGameSeason2
Advertisement
Next Article