For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'SK23' படத்தின் ரிலீஸ் எப்போது? - வெளியான புதிய தகவல்!

07:19 AM Mar 13, 2024 IST | Jeni
 sk23  படத்தின் ரிலீஸ் எப்போது    வெளியான புதிய தகவல்
Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK23' திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தர்பார்’. இத்திரைப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த முருகதாஸ், தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில், மோகன்லால், வித்யூத் ஜம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தலைப்பு வெளியிடப்படாத நிலையில், 'SK23' என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது.

இதையும் படியுங்கள் : போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்…!

‘அயலான்’ பட வெற்றியை தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில், இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement