#Thalapathy69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
Update oda vandhurkom 🤗
69% completed ███░░#Thalapathy69FirstLookOnJan26 🔥#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu… pic.twitter.com/FA2MbAjdAY— KVN Productions (@KvnProductions) January 24, 2025
தளபதி69 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் மாஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘தளபதி 69’ -ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் (ஜன.26) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.