For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அயலான் திரைப்படத்தின் 2-வது சிங்கிள் எப்போது?

06:13 PM Dec 18, 2023 IST | Web Editor
அயலான் திரைப்படத்தின் 2 வது சிங்கிள் எப்போது
Advertisement

அயலான்  திரைப்படத்தின் 2-வது பாடலான  "அயலா அயலா" பாடல் டிச.20-ம் தேதி வெளியாகும் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் அயலான்  திரைப்படம் உருவாகியுள்ளது.  இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இயக்குநர் ரவிக்குமாரின் 'இன்று நேற்று நாளை' படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது.  அயலான் அவரது 2-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள அயலான் திரைப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: வெளியானது “டிமாண்டி காலனி 2” படத்தின் டிரைலர்!

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.  சிவகார்த்திகேயனின் மாவீரன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் 2-வது பாடலான "அயலா அயலா" பாடல் வரும் டிச.20-ம் தேதி வெளியாகுமென இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement