For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

12:28 PM Aug 01, 2024 IST | Web Editor
‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது  வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

பிரபல தென் கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் டிசம்பர் 26-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

Advertisement

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? உடனடியாக கொல்லப்படுகிறார்கள்.

ஒரு சிறிய கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடருக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியாவிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்த ‘ஸ்குவிட் கேம்’ தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.  இந்த நிலையில், ‘ஸ்குவிட் கேம்’-ன் 2வது சீசன் டிசம்பர் 26-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.  இதன் 3வது மற்றும் கடைசி சீசன் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement