Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Rebel ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

09:50 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில்,  ஜி.வி.பிரகாஷ் நடித்த ரெபெல் திரைப்படம் வருகிற 11 ம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Advertisement

இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்னர் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடித்திருந்த திரைப்படம் 'ரெபெல்'. இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு, வெங்கடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : ENG vs PAK | பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 460 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து தடுமாற்றம்!

https://twitter.com/SimplySouthApp/status/1843599722356883767

இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருந்தார். கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் கடந்த மார்ச் 22-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வருகிற 11 ம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags :
GV PrakashMamitha Baijumovie updatenews7 tamilottRebeltamil cinema
Advertisement
Next Article