Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Raayan ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்

01:51 PM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

‘ராயன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் கடந்த 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் ஆக.23ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
Aparna Balamuraliar rahmancinema updateDhanushDhanush50Dushara VijayanottRaayanSelvaraghavan
Advertisement
Next Article