Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிரசாந்தின் அந்தகன் - எப்போ தெரியுமா?

04:25 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் அக்.30 இல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும். அந்தகன் படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் சமுத்திரகனி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில், கடந்த ஆக.9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் அக்.30ம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Next Article