For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கங்குவா #Release எப்போது? - நாளை வெளியாகிறது அப்டேட்!

07:21 PM Sep 18, 2024 IST | Web Editor
கங்குவா  release எப்போது    நாளை வெளியாகிறது அப்டேட்
Advertisement

கங்குவா படத்தின் அப்டேட் நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது.

'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் 'கங்குவா' ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இணையவாசிகள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், வருகிற நவம்பர் 14 ஆம் தேதியன்று கங்குவா திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கங்குவா திரைப்பட வெளியீடு தொடர்பான அப்டேட் நாளை காலை 11மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Advertisement