Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘இந்தியன் 2’ ரிலீஸ் எப்போது? வெளியான புதுத் தகவல்!

08:19 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன்,  வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது.  கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.

இதனைத் தொடர்ந்து,  இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.  இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தியன் -2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.  படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில், இப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Indian 2KamalhassanReleaserelease dateshankar
Advertisement
Next Article