For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துருவ நட்சத்திரம் வெளியீடு எப்போது? - விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்த தகவலை அப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார்.
12:53 PM Jun 12, 2025 IST | Web Editor
துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்த தகவலை அப்படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார்.
துருவ நட்சத்திரம் வெளியீடு எப்போது    விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்
Advertisement

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தை கெளதம் மேனன் வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Advertisement

2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த படம் முன்னதாக 2018 ஆம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்டது. இதையடுத்தி சில காரணங்கள் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தொடர்ந்து கடந்த 2023 நவம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கெளதம் மேனன், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும் ஆனால், படத்தையும் முடிக்கவில்லை எனவும் பணத்தை திருப்பித் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவருக்கு எதிராக அந்நிறுவன பங்குதாரர் விஜய் ராகவேந்திரா நீதி மன்றத்தை நாடினார். இது தொடர்பான வழக்கில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கெளதம் மேனன் நிகழ்ச்சி ஒன்றில்,“துருவ நடசத்திரம் திரைப்படம் வெளியீட்டிற்கு பிறகு தான் நான் மற்ற வேலைகளை தொடங்க போகிறேன். நான் அடுத்து எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. திரைப்படத்தை முதலீட்டாளர்களிடம் காண்பித்தோம் அவர்களுக்கு பிடித்துள்ளது. படத்தின் மீதுள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து வருகிறோம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக திரைப்படம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement