ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஜிக்ரா படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஆலியா பட். இவர் ஜிக்ரா எனும் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். ஜிக்ரா படம் வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆல்பா எனும் படத்தில் ஆலியா பட் நடித்துவருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.