“எலக்ஷ்ன் வரும்போது சாமிய கும்பிட கூடாது… ஜனங்கள கும்பிடனு” - நகைச்சுவையாக கவனம் ஈர்க்கும் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ டீசர்!
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் யோகிபாபு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்னும் படத்தில் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் சிறுவர்களுக்கு மத்தியில் நடக்கும் தேர்தலை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் யோகி பாபு, செந்தில், அகல்யா போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாடலான பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அரசியல் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கூறும் படத்தின் டீசர் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.