“தனுஷ் பாடினால் இளையராஜா பாடுவது போல் இருக்கிறது” - நடிகை பிரியங்கா மோகன் பேச்சு!
தனுஷ் பாடினால் இளைய ராஜா பாடுவது போல் இருக்கிறது. அதனால் தனுஷ் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் சுமேஷ் மூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாக மறைந்த நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு தனுஷ், பிரியங்கா மோகன், ஷிவ் ராஜ்குமார், சுதீப் கிஷன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், ஆங்கில பட நடிகர் எட்வர்ட், லிங்கா தனுஷ், யாத்ரா தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது:
“இந்த கதையை என்னிடம் சொல்லும் போதே எனக்கு ரொம்ப பிடித்தது. துப்பாக்கி எல்லாம் எனக்கு பிடிக்கவே தெரியாது. அவற்றை கற்று கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் கோயில் போலி மாதிரியே தெரியாது. நிஜமான கோயில் மாதிரியே தான் தெரியும். இந்த படம் நன்றாக வருவதற்கு காரணம் சத்ய ஜோதி நிறுவனம் தான். ஷிவ் ராஜ் குமாருடன் சேர்ந்து நடித்ததில் எனக்கு ரொம்ப பெருமை. தனுஷுடன் நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 1.5 வருடங்களாக தனுஷ் தாடி மீசை எல்லாம் வைத்திருக்கிறார்.
தனுஷ் பாடினால் இளைய ராஜா பாடுவது போல் இருக்கிறது. அதனால் தனுஷ் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். தனுஷுடன் ஆக்சன் படம் பண்ணிட்டேன். அடுத்ததாக love ஜேர்நெரில் படம் பண்ண வேண்டும் என்றும் ஆசை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.