”எப்போது எனக்கு எழுதி தரப் போகிறீர்கள் மிஸ்டர்?”- அனுராக் உடனான நட்பு குறித்து பகிர்ந்த சுதா கொங்கரா!
இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரின் இயக்கத்தில் வெளியான தேவ்.டி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், பிளாக் படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுதிவரும் அனுராக், தமிழில் இமைக்கா நொடிகள், லியோ, மகாராஜா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
2010-ம் ஆண்டு "துரோகி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிடைந்தன. தற்போது சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை கதாநாயகனாக கொண்டு ‘பராசக்தி’படத்தை இயக்கி வருகிறார்,
இந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்காரா தனது எக்ஸ் பக்கத்தில் அனுராக் காஷ்யப் உடனான நட்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,அந்தப் பதிவில், “நாம் கடைசியாக சந்தித்து 15 ஆண்டுகள் ஆகின்றன அனுராக் காஷ்யப். எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் - இயக்குநர். நாம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திந்துக்கொண்ட முதல் நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
மணி சாருக்கும் உங்களுக்கு இடையில் மொழி பெயர்ப்பதில் ஒரு பாலமாக இருந்தேன். நீங்கள் மூன்று மணி நேரத்திலேயே என்னை டீக்கோட் செய்துவிட்டீர்கள். இருளைச் சார்ந்தவர் நீங்கள்; சூரிய ஒளியைப் போன்றவர் நான், எப்போது காதல் கதை எழுதி எனக்குத் தரப் போகிறீர்கள் மிஸ்டர்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.