For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2024-ல் என்ன நடக்கப் போகிறது? - அச்சுறுத்தும் “பாபா வாங்காவின்” கணிப்புகள் உண்மையா?

09:01 AM Feb 17, 2024 IST | Web Editor
2024 ல் என்ன நடக்கப் போகிறது    அச்சுறுத்தும் “பாபா வாங்காவின்” கணிப்புகள் உண்மையா
Advertisement

பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன்,  இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  

Advertisement

2024 ஆம் ஆண்டு தொடங்கி ஒன்றை மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில்,  2024 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கும்,  உலகிற்கும் எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.  ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு முன், பல முன்னறிவிப்பாளர்கள் கணிப்புகளைச் செய்கிறார்கள்.  அதே நேரத்தில்,  உலகில் சில பெரிய தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள்,  அவர்களின் கணிப்புகள் பல தசாப்தங்களுக்கு முன்னர் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  பல்கேரியாவில் பிறந்த பெண்ணான பாபா வெங்காவும் அத்தகைய கணிப்பாளர்களில் ஒருவர்.

பாபா வாங்கா அவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.  பார்வை பறி போனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார்.  இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன்,  இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.

இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் தாக்குதல்,  அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்ற கணிப்பு,  2016ம் ஆண்டு ISIS என்னும் இயக்கம் வலிமை பெறும் என்ற கணிப்பு உள்ளிட்டவை உண்மையாகியுள்ளன.

பாபா வாங்கா உலக அழிவைப் பற்றியும் கணித்துள்ளார்.  உலகம் 5079 ஆம் ஆண்டில் அழியும் என அவர் கணித்துள்ளார்.  வெட்டுக்கிளிகள் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவைத் தாக்கக்கூடும் என கணித்தார்.  இது தவிர,  பஞ்சம் போன்ற பேரிடர் பிரச்னையையும் நாடு சந்திக்க நேரிடலாம் என பாபா வாங்கா கணித்துள்ளார்.   2023 ஆம் ஆண்டில் கூட,  ரஷ்யா-உக்ரைன் போர்,  உலகின் பல நாடுகளில் வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் தொடர்பான பாபா வெங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிட்டன.

பாபா வெங்கா 2024 ஆம் ஆண்டிற்கான பல கணிப்புகளையும் செய்துள்ளார்.  இவற்றில் சில உண்மையாகி விட்டால் இந்த உலம் பேரழிவை சந்திக்கும்.  2024 ஆம் ஆண்டிற்கான பாபா வெங்காவின் கணிப்பின்படி,  இந்த ஆண்டு உலகம் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக் கூடும்.  இந்த நிலை உலகப் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று 2024 இல் உயிரியல் ஆயுதங்களை சோதிக்க வாய்புள்ளது.  இது நடந்தால்,  அது சோதிக்கப்படும் பகுதியின் மண், மக்கள், மரங்கள், தாவரங்கள், விலங்குகள், நீர் போன்றவற்றில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.

புவி வெப்பமடைதல் காரணமாக மோசமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் ரஷ்ய அதிபர் புதின் கொல்லப்படலாம்.  அதிபர் புடினைக் கொல்லும் சதியில் அவரது நாட்டு மக்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கணித்துள்ளார்.

பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை என்பது எதிர்காலத்தில் தெரியும். அவரது பழைய கணிப்புகள் பல உண்மையானதை நினைத்து  பலரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement