For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? - ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

12:37 PM May 22, 2024 IST | Web Editor
என்னது பினாயில் செலவு ரூ 55 லட்சமா    ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்
Advertisement

திருநெல்வேலி மாநகராட்சியில், ஒரு மாத பினாயில் செலவு ரூபாய் 55 லட்சம் என கணக்கு காட்டி மோசடி செய்ததாக எழுப்பப்பட்ட புகாரில் நடந்த ஊழல் ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

Advertisement

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.55 லட்சத்திற்கு பினாயில் வாங்கியதாக கணக்கு காட்டி மோசடி செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.  திருநெல்வேலி மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே பினாயில், சுண்ணாம்பு, ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்குவது வழக்கம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை, வெள்ளப்பெருக்கின் போது கூட இதுபோன்று பல லட்சக்கணக்கில் பினாயில் வாங்கப்படவில்லை. மேலும் கழிப்பறை தூய்மைப்பணிகளை பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களே மேற்கொள்கின்றன. எனவே, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா இந்த ரசீதுக்கு பணம் வழங்க அனுமதி மறுத்தார்.

இந்நிலையில் ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ரூ.55 லட்சத்திற்கு  பினாயில் வாங்கியதாக கணக்கு காட்டி மோசடி செய்ததாக ஊழல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Tags :
Advertisement