For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
12:44 PM Aug 29, 2025 IST | Web Editor
கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு   உச்சநீதிமன்றம் கேள்வி
Advertisement

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

Advertisement

அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலை துறை ஆணையருடைய அறிவிப்பாணையை ரத்து செய்ய மறுத்தது. இந்த நிலையில் கல்லூரி கட்டுவதற்கான முதற்கட்ட பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது என்று டி.ஆர்.ரமேஷிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ரமேஷ், தற்போது கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது கொளத்தூர் சோமநாத் ஆலயத்தின் இடமாகும், மேலும், கோயில் நிதியை கல்லூரிக்காக பயன்படுத்துகின்றனர். எனவே கல்லூரி கட்டிடம் கட்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சோம்நாத் ஆலயத்தின் இடத்தில் கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அந்த இடத்திற்கான வாடகையாக 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை இந்து சமய அறநிலையத்துறையானது கோயிலுக்கு வழங்கி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட இடத்தை பொறுத்த வரைக்கும் வாடகை இல்லாமல் இலவசமாக பயன்படுத்தவில்லை மேலும் , கபாலீஸ்வரர் திருக்கோயிலின் சார்பில் தான் கல்லூரி ஆனது அமைக்கப்பட இருக்கிறது. கல்விக்காகத்தான் இந்த இடத்தை பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், மாணவர்களின் எதிர்காலத்துக்காக கல்லூரிக்கான கட்டமைப்பை தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்துகிறது. அதற்காகத்தான் நிதியை பயன்படுத்துகிறார்கள். எனவே கல்விக்காக கட்டணம் அமைப்பதோ அல்லது நிதியை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும் தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement