‘இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI’
முகமூடி அணிந்த ஒருவர் ஹிப்னாஸிஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வழிப்போக்கரைக் கொள்ளையடிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, இது இந்தியாவில் நடந்ததாகக் கூறுகின்றனர். அந்த வீடியோவில், முகமூடி அணிந்த ஒருவர் தெருவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை நிறுத்துவதாக காட்டுகிறது. பின்னர், அந்த நபர், அந்த வாகன ஓட்டிக்கு ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார், ஒரு குறிப்பிட்ட ரசாயனம் தெளிக்கப்பட்ட அந்த காகிதம் அவர்களை ஹிப்னாடிஸ் செய்தது, என வீடியோவில் ஒருவர் கூறுகிறார். பின்னர் அந்த வாகன ஓட்டி தனது அனைத்து உடைமைகளையும் முகமூடி அணிந்த நபரிடம் ஒப்படைப்பதைக் காணலாம்.
இதுகுறித்த விசாரணையில், இந்த பதிவை உருவாக்கியவர் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோ எனவும், இந்தியாவுடன் தவறாக இணைக்கும் வகையில், உண்மையான சம்பவமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதும் கண்டறியப்பட்டது.
உரிமைகோரல்:
ஜனவரி 29 அன்று இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அதில் ஹிப்னாஸிஸ் மூலம் இந்திய தெருவில் ஒரு கொள்ளை நடப்பதைக் காட்டியதாகக் கூறுகிறார். இதோ அந்த பதிவுக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு, அதைத் தொடர்ந்து அதன் ஸ்கிரீன்ஷாட்.
உண்மை சரிபார்ப்பு:
InVid Tool தேடலின் மூலம் வைரல் வீடியோவை இயக்கிய The Desk, பல keyframes-களைக் கண்டறிந்தது. Google Lens மூலம் keyframes-களில் ஒன்றை இயக்கியபோது, பல பயனர்கள் இதே போன்ற கூற்றுகளுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இதுபோன்ற 2 பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
அவற்றின் காப்பக இணைப்புகள் முறையே இங்கே மற்றும் இங்கே கிடைக்கின்றன. விசாரணையின் அடுத்த பகுதியில், வைரல் வீடியோவை கவனமாக பகுப்பாய்வு செய்து, அதில் 'The Jim Ahmed' இன் வாட்டர்மார்க் வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்து, கூகுளில் தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டது, அப்போது, அதே பெயரில் ஒரு Facebook கணக்கு கிடைத்தது. அக்கணக்கின் பயனர், பயோவில், தன்னை வங்கதேசத்தைச் சேர்ந்த டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குபவராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அக்கணக்கிற்கான இணைப்பு, அதன் ஸ்கிரீன்ஷாட்டுடன் இங்கே உள்ளது.
அந்த பக்கத்தை ஸ்கேன் செய்து, ஜனவரி 25, 2025 அன்று பகிரப்பட்ட அதே வீடியோ கண்டறியப்பட்டது. வீடியோவில் வைரல் வீடியோவின் நீட்டிக்கப்பட்ட பகுதி அடங்கும், அங்கு முகமூடி அணிந்த நபர் The Jim Ahmed, ஒரு வீடியோ உருவாக்குபவராக, இறுதியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பதிவுக்கான இணைப்பு இங்கே, அதைத் தொடர்ந்து அதன் ஸ்கிரீன்ஷாட் உள்ளது.
வைரல் காணொளியில் உள்ள உள்ளடக்கம் பேஸ்புக் காணொளியுடன் பொருந்துவதைக் காட்டும் ஒரு படம் கீழே உள்ளது.
கீழே உள்ள வீடியோவின் மற்றொரு ஸ்கிரீன்ஷாட்டில், அந்த நபர் தன்னை ஒரு "வேடிக்கையான பதிவுகளை உருவாக்குபவர்" என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
மேலும், கணக்கை ஸ்கேன் செய்தபோது, ஜனவரி 24, 2025 அன்று பயனரின் பக்கத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவும் கிடைத்தது. வைரலான வீடியோவைப் பற்றி (முதலில் ஜனவரி 23 அன்று வெளியிடப்பட்டது) குறிப்பிடுகையில், இது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
காணொளிக்கான இணைப்பு இங்கே.
அதைத் தொடர்ந்து, இந்தியத் தெருவில் நடந்த கொள்ளைச் சம்பவமாகப் பகிரப்பட்ட காணொளி உண்மையில் ஒரு வங்கதேச வீடியோ படைப்பாளரால் உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காணொளி என்று முடிவு செய்யப்பட்டது.
முடிவு
பல சமூக ஊடக பயனர்கள் இந்திய தெருவில் ஹிப்னாஸிஸைப் பயன்படுத்தி நடந்த கொள்ளை சம்பவத்தைக் காட்டுவதாகக் கூறும் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும், வங்கதேச வீடியோ படைப்பாளரால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காணொளி, உண்மையான சம்பவமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, அதை இந்தியாவுடன் தவறாக இணைத்து பகிரப்பட்டது கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.