காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவது ஏன்?
• நேரு குடும்பத்தினர் 1952 முதல் ரேபரேலியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்
• முதன்முறையாக பெரோஸ் காந்தி 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்
• இந்திரா காந்தி 1967 மற்றும் 1977 க்கு இடையில் ரே பரேலி எம்.பி.யாக இருந்தார். இதனை அடுத்து 1980-யிலும் ரேபரேலியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.
• 2004 முதல், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார்.
• நேரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் - அருண் நேரு மற்றும் ஷீலா கவுல் - ஆகியோரும் இந்த இடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேரு குடும்பத்திற்கும் ரேபரேலி தொகுதிக்கும் உள்ள தொடர்பும் பற்றுதலும் மிகவும் ஆழமானது என அப்பகுதியை சேர்ந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பங்கஜ் திவாரி கூறுகிறார்.
மேலும், ரயில் பெட்டி தொழிற்சாலை, தொழில் பயிற்சி நிறுவனம், பொறியியல் கல்லூரி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபார்மாசூட்டிகல் ரிசர்ச் செண்டர் என பல வளர்ச்சித் திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரேபரேலி தொகுதியில், கொண்டுவரப்பட்டதால் நேரு குடும்பத்தையே மக்கள் விரும்புகின்றனர் எனவும் அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.