தோல்விக்கான காரணம் என்ன?.. ரோகித் சர்மா பேட்டி.!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், தோல்விக்கான காரணத்தை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்கள் எடுத்து 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 420 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றி இலக்கு 231 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்திய சார்பில் பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா 47 ஓவரில் 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா 202 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
எங்கு தவறு நடந்தது என்று சுட்டிக்காட்டுவது மிகவும் கடினமானது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றதும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளோம் என நினைத்தோம். இங்கிலாந்து வீரர் ஆலி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர் ஆடிய மிகச்சிறந்த ஆட்டம் அது. நாங்கள் சரியான இடத்தில் பந்துவீசினோம். திட்டங்களை பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படுத்தினர்.
ஆனால், ஆலி போப் சிறப்பாக ஆடினார் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு அணியாக நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. சிராஜ், பும்ரா இருவரும் ஆட்டத்தை 5வது நாளுக்கு கொண்டுசெல்ல வேண்டுமென நான் விரும்பினேன். பின்வரிசை வீரர்கள் கடுமையாக போராடினர் எனக் கூறினார்.