"டியூட் கதைக்கும், ரஜினிக்கும் என்ன சம்பந்தம்..?" - இயக்குனர் கீர்த்திஸ்வரன் பேட்டி..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களைல் ஒருவான பிரதீப் ரங்கநாதன் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் டியூட். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்காராவின் துணை இயக்குநர்களில் ஒருவரான கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். டியூட் படத்திலிருந்து ’ஊரும் பிளட்’ மற்றும் ’நல்லா இரு போ’ ஆகிய பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள.
இந்த நிலையில் படத்தின் இயக்குநரான கீர்த்திஸ்வரன் டியூட் படத்தின் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியது,
"நான் இயக்கும் முதல் படம் டியூட். இயக்குனர் சுதா கொங்கராவிடம் பல படங்களில் பணியாற்றிவிட்டு இந்த கதை உருவாக்கினேன். நான் கமல் பிறந்த பரமக்குடிகாரன். ஆனால் 30 வயது ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என யோசித்து இந்த கதையை எழுதினேன். ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிப்பு, கேரக்டர் கொஞ்சம் ரஜினி சாயலில் இருக்கும். அதேபோல் ஹீரோயின் மமிதா பைஜூ கேரக்டர் அந்த கால ஸ்ரீதேவி சாயலில் இருக்கும். படம் கமர்ஷியலாக மட்டுமல்ல, எமோசனலாக, முக்கியமான விஷயத்தை சொல்லும் படமாக இருக்கும்.தாலி செண்டிமெண்ட் படத்தில் மெயின் மேட்டர். ஒரு ஈவெண்ட் கம்பெனி நடத்துபவராக ஹீரோ வருகிறார். சரத்குமாருக்கு முக்கியமான வேடம்.ஹீரோ அம்மாவாக ரோகிணி வருகிறார். பரிதாபங்கள் டிராவிட் இதில் காமெடி மட்டுமல்ல, குண சித் ர வேடத்திலும் நடித்துள்ளார். முந்தைய படங்களில் ஹீரோ கேரக்டர் சில நடிகர் சாயலில் இருப்பதாக விமர்சனம் வந்து இருக்கலாம். இதில் புதிதாக இருக்கும்.
சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ஒரு பாடலை பிரதீப் பாடியுள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது பிரதீப் ரங்கநாதனே இயக்குனர் என்றாலும் எந்த இடத்திலும் எனக்கு அவர் தொந்தர செய்யவில்லை. என் முதல் படமான டியூட் தீபாவளிக்கு வருவது மகிழ்ச்சி. பிரதீப் ரங்கநாதன் நடித்த இன்னொரு படமான எல்ஐகே தீபாவளிக்கு வருமா என தெரியவில்லை. இந்த படத்தில் வில்லன் இருக்கிறார் அவர் தனி ஆளா? சூழ்நிலையா? என்பது சஸ்பென்ஸ்.
பிரேமலு படம் பார்த்து ஹீரோயின் மமிதாவை நாங்கள் புக் பண்ணவில்லை. அதற்கு முன்பே சூப்பர் சரண்யா என்ற படம் பார்த்து, அவர் நடிப்பு பார்த்து ரசித்து தான் அவரை புக் பண்ணி. மமிதா பேச்சு, நடிப்பு, கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். டியூட் படம் மாஸாக இருக்கும். ஹீரோ பிரதீப் நடித்த லவ்டுடே, டிராகன் படங்கள் ஹிட் ஆகியுள்ளது எனக்கு பிளஸ்தான். எனக்கு எந்த பிரஷரும் இல்லை. வெளிநாட்டில் எந்த காட்சியும் படமாக்கப்படவில்லை" இவ்வாறு கீர்த்தீஸ்வரன் கூறினார்.