3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
"3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நிலையில் கடந்த சனிக்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி மசோதக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது” என்று வாதங்களை அடுக்கினார்.
சட்டப்பேரவையில் 2-ஆவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். உரிய காரணங்கள் இன்றி மசோதாக்களை திருப்பி அனுப்பிவதாகவும் தமிழக அரசு குற்றச்சாட்டு தமிழக அரசு குற்றம்சாட்டியது.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், ஏற்கனவே மசோதாக்கள் இயற்றப்பட்டு அனுப்பிய நிலையில் அதனை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது 10 மசோதாக்கள் ஆளுநர் திரும்ப அனுப்பியுள்ளார். அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. இரண்டாம் முறை இயற்றி அனுப்பினால் அதனை Money Bill-லாக தான் பார்க்க வேண்டும். எனவே அதனுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தாலும், ஆளுநருக்கு அதனை நிறுத்தி வைக்க என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பான Communication ஆவணங்கள் எங்கு உள்ளது ? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மசோதாக்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு திருப்பி அனுப்பப் பட்டது ஏன்? என்றும், கடந்த 10 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என கேள்வி எழுப்பினார்.
அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர்கள் ஏன் காத்திருக்க வேண்டும்?
- சட்டசபை மசோதா தவறு என கருதினால் திருப்பி அனுப்பும் போது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்பு இடம் பெற வேண்டும்.
- சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால் நிதி மசோதாக்களை போல கருதி ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.
- மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஏன் ஒப்புதல் தராமல் இருக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க சற்று அவகாசம் வேண்டும் என்ற மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கூற்றை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.