Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்ன கூறுகிறது?

01:07 PM Feb 10, 2024 IST | Web Editor
Advertisement

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

Advertisement

ஒரு வெள்ளைத் தாள் ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது பிரச்னையில் விரிவான தகவல், பகுப்பாய்வு மற்றும் முன்மொழிவுகளை வழங்குகிறது. கொள்கைகளை வடிவமைக்க அரசாங்கங்கள்,  நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களால் இது பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது.  பொருளாதாரத்தைப் பற்றி பேசுகையில், இது நிதிக் கொள்கை, பணவியல் கொள்கை,  வர்த்தகக் கொள்கை மற்றும் மாற்று விகிதக் கொள்கை போன்ற பல்வேறு தலைப்புகளில் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையை விவரிக்கிறது.

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது.  இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.  இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும்,  மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார்.  அதில் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான 10 ஆண்டு கால முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கீழ் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன. 2008ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார மந்த நிலையின் போது இந்தியா மோசமாக பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கடந்த 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற போது பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையிலிருந்தது.  டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உட்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை. மேலும்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விட்டுச் சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ளது என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவை: 

வங்கி மோசடிகள்
  • காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் தலையீட்டால் வங்கித் துறை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது என்பதை அரசின் வெள்ளை அறிக்கை விளக்கியது.
  • அந்த காலக்கட்டத்தில் வராக்கடன்கள் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.  வாஜ்பாய் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, ​​ வராக்கடன்  7.8 சதவீதமாக இருந்தது,  ஆனால் பின்னர் அது 12.3 சதவீதமாக அதிகரித்தது.
நிலக்கரி சுரங்க ஊழல்
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஊழல் நடந்ததாகவும், இதனால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் வெள்ளை அறிக்கை கூறியுள்ளது. இதன் காரணமாக மின் உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு காலத்தில் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டது.
  • மோடி அரசு அதனை மேம்படுத்தி, சுரங்கத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழி திறந்துவிட்டோம்.  பின்வாசல் வழியாக அல்ல, ஏலம் மூலம் கொண்டுவரப்பட்டது.
வெள்ளை அறிக்கை கொண்டு வந்ததன் நோக்கம்?
  • 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் அப்போதிருந்த வளங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்துவது போன்ற பல நோக்கங்கள் இந்த வெள்ளை அறிக்கையை கொண்டு வந்ததன் பின்னணியில் இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
  • மேலும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும்,  மக்களின் வளர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • அரசியல் ஆதாயங்களை விட தேச நலனை முதன்மையாக வைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • வாய்ப்புகளின் இருப்பைக் கருத்தில் கொண்டு, புதிய உத்வேகங்கள் மற்றும் புதிய தீர்மானங்களுடன் நாட்டை வளர்ச்சிக்கு தயார்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
UPA மற்றும் NDA அரசாங்கத்தின் கீழ் நாட்டின் செயல்திறன்

பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பலமுறை மோடி அரசை நாடாளுமன்றத்தில் தாக்கியுள்ளது. இப்போது காங்கிரஸின் கூற்றை வெள்ளை அறிக்கை மூலம் அம்பலப்படுத்தும் வேலையை மத்திய அரசு செய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இதில் வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் உள்ள வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது.

 

UPA
NDA
 பணவீக்கம் (சதவீதத்தில்)8.2 5.0
நாட்டின் கொள்முதல் திறன் (PPP - Purchasing power parity )3,8896,016
மூலதனச் செலவு (ஜிடிபியின் சதவீதம்)1.73.2
எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி (சதவீதம்)7.622.7
அந்நிய நேரடி முதலீடு (பில்லியன் டாலர்களில்)305596.5
புதிய முதலீடுகள் (பில்லியன் டாலர்களில்)3501,17,257
மெட்ரோ ரயில் உள்ள நகரங்கள்520
தேசிய நெடுஞ்சாலையின் நீளம் (ஆயிரம் கிமீ)25.754.9
ரயில் விபத்துக்கள்23334
விமான நிலையங்களின் எண்ணிக்கை74149

 

இவ்வாரு நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து,  நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது `வெள்ளை அறிக்கை அல்ல, பொய் அறிக்கை' என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. மேலும்,  மோடி அரசு செய்த பாவங்களை பூசி மெழுக வெள்ளை பொய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன்,  கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்,  மத்திய அரசின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கா ர்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement
Next Article