Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது" - திருமாவளவன் கேள்வி?

வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
07:00 AM Jul 01, 2025 IST | Web Editor
வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியவர், "அம்பேத்கர் அரசியலை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்றால் அரசு அதிகாரம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

Advertisement

வெறும் பதவிக்காக பார்ப்பவர்களுக்கு முதல்வர், பிரதமர் என்ற பதவிகளை அடைவதற்கு என்னென்ன குறுக்கு வழிகள் இருக்கிறதோ அதைப் பற்றி சிந்திப்பார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் தேசிய அளவிலான பார்வை கொண்டவர். தேசிய அளவில் விளிம்பு நிலை மக்களை அதிகார வலிமை உள்ளவர்களாக பரிணாமம் பெற செய்ய வேண்டும் என விரும்பியவர்.

அவர் விரும்பிய அதிகாரம் என்பது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் பதவி என்பது தான் என்று நான் ஒரு விளக்கம் கூறினேன், அவ்வளவுதான் எனக்கான பதவியை எந்த பொருளில் கூறவில்லை. எங்கள் இயக்கம் அதிகாரம் பெற வேண்டும்,

அந்த அடிப்படையில் தான் துணை முதல்வர் பதவியை கேட்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கலாம். வேங்கை வயல் பிரச்சனையில் பிஜேபி என்ன செய்தது? என்பதை முருகன் கூறட்டும் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு தலித் என்ற அடிப்படையில் அவர் பங்கு என்ன என்பதை அவர் கூறட்டும்? இதுவரையில் வேங்கை வயல் பிரச்னைக்கு என்ன குரல் கொடுத்திருக்கிறது பிஜேபி? வேங்கை வயலுக்காக போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறதா? என்பதை பிஜேபி விளக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AirportBJPChennaiCMPMPostingPressMeetthirumavalavanVenkaivayalissue
Advertisement
Next Article