For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்றத்திற்குள் எம்பி-க்கள் மற்றும் பார்வையாளர்கள் நுழைய கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் என்னென்ன?

08:29 PM Dec 13, 2023 IST | Web Editor
நாடாளுமன்றத்திற்குள் எம்பி க்கள் மற்றும் பார்வையாளர்கள் நுழைய கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் என்னென்ன
Advertisement

நாடாளுமன்றத்திற்குள் எம்பி-க்கள் மற்றும் பார்வையாளர்கள் நுழைவதற்கு பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

Advertisement

குறிப்பாக நாடாளுமன்றத்திற்குள் எம்.பிக்கள் செல்ல அவர்களின் அடையாள அட்டையினை பரிசோதனை செய்தும், கைரேகை பதிவு செய்த பின்னரே உள்ளே செல்லும் வழிமுறையானது அமைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளின் மூலம் பரிசோதனை செய்து, உறுப்பினர்கள் செல்லும் நுழைவு வாயில் மூலம் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதேபோல் பார்வையாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய, 4 கட்ட பாதுகாப்பு சோதனைகளை கடந்து தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.  தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளின் மூலம் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் உள்ளே செல்ல முடியும்.

மேலும் பார்வையாளர்கள் உள்ளே செல்லே எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் கட்டாயம். கடிதம் இல்லையெனில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.  முன்னதாக பார்வையாளரின் புகைப்படம், ஆதார் உள்ளிட்ட விவரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு பார்வையாளர்களுக்கான பிரத்யேக பாஸ் வழங்கப்படும்.

பார்வையாளர்களுக்கு நுழைவு வாயில் சோதனைகள் முடிந்த பிறகு வரவேற்பறைக்கு சென்றதும் மீண்டும் ஒருமுறை புகைப்படம் எடுக்கப்படும்.  தொடர்ந்து பார்வையாளர் மாடத்திற்குள் செல்லும் முன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளதா என்பதை உறுதி செய்து, மீண்டும் ஒருமுறை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement