For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் என்னென்ன?

03:46 PM Jan 06, 2024 IST | Web Editor
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ல் எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் என்னென்ன
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் புதிதாக எதிர்பார்க்கப்படும் முதலீடுகள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 7, 8) நடைபெறவிருக்கிறது.  இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  நாளை காலை 10 மணி அளவில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­க உள்ளது.  அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்­ற உள்ளார்.  அதன் ­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­று­கி­றார்.

மேலும், மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்று உரை­யாற்­று­கி­றார்.  இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன.  ஜவுளி,  காலணி தொழில்­கள்,  மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடத்­தப்­பட உள்­ளன.

உலக முத­லீட்­டாளர் மாநாட்­டின் தொடக்க விழாவை பள்ளி,  கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து,  இந்த மாநாட்­டின் இரண்­டாம் நாளான ஜன­வரி 8-ஆம் தேதி பல்­வேறு நாடு­க­ளின் தொழில்­நி­று­வ­னங்­கள் தமிழ்­நாடு அர­சு­டன் புரிந்­து­ணர்வு        ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­திட உள்­ளன.

சில புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்,  முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் முன்­னி­லை­யில், தமிழ்­நாடு அர­சின் தொழில் வழி­காட்டி மையம் மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்நிலையில்,  இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்க்கப்படும்,  புதிய முதலீடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு அமைய உள்ளன என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

  • மைக்ரோசாப்ட்,
  • போயிங் போன்ற நிறுவனங்கள் புதிய ஆலைகள் தொடங்க உள்ளன
  • இந்தியாவிலே முதன்முறையாக தமிழ்நாட்டில் அடிடாஸ் நிறுவனமும் முதலீடு செய்ய இருக்கின்றது.
  • டாடா எலெக்ட்ரானிக்ஸ் - ஒசூர்
  • செம்கார்ப் - டாடா பவர்  -  நெல்லை, தூத்துக்குடி
  • ஸ்டெல்லான்டீஸ் - வடதமிழ்நாடு
  • மகேந்திரா ஹாலிடேஸ் - தமிழ்நாடு முழுவதும்
  • காலணி தொழிற்சாலை - கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர்
  • 16000கோடி ரூபாய் முதலீட்டில் மின் வாகனம் தயாரிக்கும் வின்பாஸ்ட் நிறுவனம் தென் மாவட்டமான தூத்துக்குடியில் துவங்க திட்டம்
Tags :
Advertisement