டெல்லி முதலமைச்சர் #ArvindKejriwal -ன் ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்துள்ளது.இதை தொடர்ந்து 5 நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளளது.
இதையும் படியுங்கள் : ரூ.68 கோடி மோசடி செய்ததாக #KarnatakaCM சித்தராமையா மீது மேலும் ஒரு புகார்!
உச்சநீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் பின்வருமாறு:
1.மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது.
2.முதலமைச்சர் அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்லக்கூடாது.
3.கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.
4.வழக்கு தொடர்பான எந்த சாட்சியுடனும் தொடர்பு கொண்டு பேசக் கூடாது.விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
5. ரூ.10 லட்சம் பிணையத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.