ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் எவை?
நிலுவையில் உள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் மீண்டும் சட்ட மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மசோதாக்களின் நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளார். இதன் காரணமாக மீண்டும் இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் எவை எவை ?
1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,
2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா
3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா
6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா
9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.