நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார்.
மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆளும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதல்வர் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மட்டுமே.
இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார். புறக்கணிப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று நான் கூறினேன். நான் பேச விரும்பினேன், ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். 10-20 நிமிடம் நான் மட்டுமே பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.