For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதா? உண்மை என்ன?

05:24 PM Jun 01, 2024 IST | Web Editor
பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதா  உண்மை என்ன
Advertisement

This news fact checked by Logically Facts

Advertisement

3 நாட்கள் தியானத்தில் ஈடுபடுவதற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு எதிராக Go Back Modi மற்றும் கருப்பு பலூன்களை பறக்க விட்டு பிரசாரம் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.  இதன் உண்மைத் தன்மை குறித்து Logically Facts ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் இன்று  நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற்றது.

7-ம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்த நிலையில்,  வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து MI-17 வகை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றார்.  கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை தியானத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்று தியானத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றார்.  அதன் பின்னர் மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார்.

கன்னியாகுமரியில் Go Back Modi போராட்டம் நடைபெற்றதா?

மே 30 ஆம் தேதி பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை ஒட்டி  மூன்று காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலானது.  அவற்றில்  "கோ பேக் மோடி" என்ற இடம்பெற்றிருந்தது.  மேலும் அந்த வீடியோ பதிவில் ”கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு தியானம் செய்ய வந்துள்ள பிரதமர் மோடிக்கு  தமிழக மக்கள் இப்படித்தான் பதில் அளிப்பார்கள்” என கேப்சன் எழுதப்பட்டிருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக,  மோடியின் தமிழக வருகைக்கு எதிராக  "கோ பேக் மோடி" என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வருவது வழக்கம்.  அதன்படி இந்த முறையும் மோடிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது என செய்திகள் பரவின.  சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் ரயில் நிலையத்தின் பெயர் பலகை,  கன்னியாகுமரி என்று ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளது.  அதே நேரத்தில்  அந்த பெயர் பலகையில் "கோ பேக் மோடி" என்று எழுதப்பட்டுள்ளது.  அதேபோல  "கோ பேக் மோடி"  வாசகம் எழுதப்பட்ட கருப்பு பலூன்களை ஒரு நபர் பறக்க விடும் வீடியோ ஒன்றும் அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.  அந்த வீடியோவில், “இதைப் போல ஒரு லட்சம் பலூன்கள் காற்றில் பறக்கத் தயாராக உள்ளன” என்று ஒருநபர் கூறுகிறார்.

உண்மை சரிபார்ப்பு : 

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவின் உண்மைத் தன்மை கண்டறிய ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.  அதன் முடிவில் PetaPixel இல் உள்ள கட்டுரையில் பரவிய அசல் படத்தைக் லாஜிகலி ஃபேக்ட்ஸ் கண்டுபிடித்தது.  இப்படம் மார்ச் 9, 2016 அன்று வெளியான பழைய படம் என கண்டறிந்தது.  அதன்படி திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 15906) ரயில் நிற்கும்படியான கன்னியாகுமரியின் ரயில் நிலையத்தின் படத்தை கண்டறிய முடிந்தது.  வைரலான படத்தில் கன்னியாகுமரி என்ற இடத்தின் பெயரை தமிழ்,  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் காண்பிக்கும் பலகையைக் இடம்பெற்றது.  ஆனால் அசல் படங்களை ஒப்பிட்டால் இந்தியில் கன்னியாகுமரி என்று எழுதப்பட்ட இரண்டாவது வரியில்  "கோ பேக் மோடி" என்று மாற்றப்பட்டுள்ளது.

பெட்டாபிக்சல் புகைப்படத்தில் உள்ள பிற விவரங்கள்,  பின்னணியில் உள்ள பயணிகள், பெஞ்ச் மற்றும் மின் இணைப்பு ஆகியவை வைரல் படத்தில் உள்ள காட்சிகளுடன் பொருந்துகின்றன.

இரண்டாவதாக கருப்பு பலூன்களை பறக்க விடும் வீடியோவின் கீ ஃபிரேம்களை பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அது ஏப்ரல் 9, 2023 தேதியிட்ட  ஒரு எக்ஸ் பயனரின் இடுகையிட்டதைக் காட்டியது.  இதன் அடிப்படையில் அவை குறித்த செய்திகளை கூகுளில் தேடியதின் முடிவாக  ஏப்ரல் 8, 2023 அன்று தி நியூஸ் மினிட் வெளியிட்ட கட்டுரையில் , "மோடி வருகை: காவல்துறை காங்கிரஸ் தலைவரை கைது செய்தது,  சென்னையில் கருப்பு பலூன்களைக் கைப்பற்றியது" என்ற தலைப்பில் செய்திகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது தமிழ்நாடு காங்கிரஸின் எஸ்.சி பிரிவின் தலைவரான எம்.பி. ரஞ்சன் குமார் தனது வீட்டில் இதுபோன்ற 500 கருப்பு பலூன்களை  பறக்க வைக்க வைத்திருந்தார்.  அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்களுடன் கிட்டத்தட்ட 2,000 பேர் மோடியில்  வருகையை எதிர்க்கும் வகையில் கருப்பு பலூன்களை திட்டமிட்டிருந்தது ஆதாரப்பூர்வமாக உறுதியானது.

முடிவு :

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Go Back Modi என பிரசாரம் செய்ததாகவும்,  கருப்பு பலூன்கள் பறக்க விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலான செய்தி தற்போதையல்ல பழையது என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Logically Facts and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement