#Maharastra தேர்தல் பேரணியில் ISIS, ஹிஸ்புல்லா அமைப்புகளின் கொடிகள் பயன்படுத்தப்பட்டதா? - உண்மை என்ன ?
This news Fact Checked by ‘Newsmeter’
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரத்தின்போது தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மற்றும் லெபனானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றின் கொடிகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது. இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து விரிவாக காணலாம்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 2ம் கட்டமாக 38 தொகுதிகளிலும் நாளை (நவ-20ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற பேரணியில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது.
மகாராஷ்டிராவின் அகோலா மேற்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஜித் கான் மஸ்தான் கானின் தேர்தல் பேரணியில் இந்த கொடிகளை தொண்டர்கள் ஏந்தியவாறு சென்றதாக வீடியோ காட்டுமெது. ஒரு எக்ஸ் பயனர் இந்த பைக் பேரணியை பகிர்ந்து பாலஸ்தீனம் ஈரான், ஈராக் ஐஎஸ்ஐஎஸ், ஹிஸ்புல்லா கொடிகள் இடம்பெற்றுள்ளன இவற்றில் நமது நாட்டின் கொடி எங்குமே இல்லை என பதிவிட்டிருந்தனர்.
உண்மை சரிபார்ப்பு :
இந்த பைக் பேரணியின் தேர்க்கான காங்கிரஸ் தலைவர் சஜித் கான் பேரணி குறித்து வைரலாகும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அவை செப்டம்பர் 23 அன்று பதிவேற்றப்பட்ட விடியோவை காட்டியது. இதன் மூலம் இந்த வீடியோ ஒரு மாதத்திற்கும் முன்னரே பதிவாக பழைய வீடியோ என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் அந்த விடியோவின் தலைப்பின்படி, அந்த பேரணி லத்தூரில் இருத்து மும்பை வரை என குறிப்பிட்டிருந்தது.
செப்டம்பர் மாதம் டிப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவின் மூலம் அது லத்தூரில் நடந்த மீலாத் நபி தின விழாவின் பேரணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல சிந்சர் நியூஸ் யூடியு சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவிற்கும் இந்த வீடியோவிற்கு குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் காட்டுகிறது. இரண்டு வீடியோக்களிலும் ஒரே கருப்பு காரும் வெள்ளை உடையில் கொடியை எந்திய ஒரு நபரும் தெளிவாகத் தெரியும்படி உள்ளது. அதேபோல பச்சை, சிவப்பு என பல்வேறு நிறங்களில் பல கொடிகள் மீலாது நபி விழா பேரணியில் பயன்படுத்தப்பட்டது.
லத்தூர் டெலிபோன் டவர் என்ற முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடியதன் மூலம், லத்தூரில் உள்ள மகாத்மா காந்தி சௌக்கில் உள்ள டெலிபோன் பவனை அடையாளம் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து கூகுள் ஸ்ட்ரீட் வியூவைப் பயன்படுத்தி, எம்எஸ்ஹெச்3 சாலையில் வைரலான வீடியோ பதிவு செய்யப்பட்ட சரியான இடத்தைக் கண்டறிந்தோம். வைரல் வீடியோவின் கீஃப்ரேம் மற்றும் லத்தூரில் உள்ள அதே இடத்தின் கூகுள் ஸ்ட்ரீட் வியூ படத்திற்கு இடையேயான ஒப்பீடு கீழே உள்ளது. இதன் மூலம் வைரலாகும் வீடியோவானது அகோலாவில் அல்லாமல் லத்தூரில் எடுக்கப்பட்டது உறுதியாகிறது. அகோலா மேற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சஜித் கான் மன்னன் கான் போட்டியிடுகிறார். லத்தூர் மாவட்டம் அகோலாவிலிருந்து 302 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரத்தின்போது தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மற்றும் லெபனானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றின் கொடிகள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலான பதிவுகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.