பாகிஸ்தானுக்கு ராணுவ பொருட்கள் சரக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டதா? - சீனா பாதுகாப்பு அமைக்கம் கூறுவது என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவானது. இது அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடை இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் செய்து கொண்ட நேரத்தில் துருக்கி மற்றும் சீனாவின் ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியானது. அதை உறுதிபடுத்தும் வகையில், சமீப காலமாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கும் இந்திய ராணுவஅதிகாரிகள், துருக்கியின் ட்ரோன்கள் மற்றும் பாகிஸ்தானின் ஏவுகனைகள் வீழ்த்தப்பட்டதாக தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் பரவும் அந்த செய்திகளுக்கு சீனா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீன ராணுவம் மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானம் மூலம் ராணுவ பொருட்களை பாகிஸ்தானுக்கு எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல என்றும் அது உண்மைக்குப் புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மக்கள் விடுதலை ராணுவ விமானப் படை (PLAF), அதன் சியான் Y-20 ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ராணுவ பொருட்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல என்றும் சீனா கூறியுள்ளது. அத்துடன் ராணுவம் தொடர்பான வதந்திகளை பரப்புவர்கள் சட்டரீதியாக பொறுப்பேற்கபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.