For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

11:48 AM Feb 16, 2024 IST | Web Editor
 4 மாதங்களில் 4 5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை    அமைச்சர் மா சுப்பிரமணியன்
Advertisement

கடந்த 4 மாதங்களில் 4.5 லட்சம் பேரிடம் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.

Advertisement

புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்  மற்றும் HCL நிறுவனம் இணைந்து 7வது இளைஞர் நல விழா நடத்தப்பட்டது.  போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.  அதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேடையில் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு புற்றுநோய் | சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு...

"அடையாறு புற்றுநோய் நிறுவனத்தால் ஆண்டுதோறும் புற்றநோய் விழிப்புணர்வுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் 7வது இளைஞர் நல விழாவில் கலந்துக்கொள்ளவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.  இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் பொதுமக்களிடையே புற்றநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  கன்னியாகுமரி மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 4 மாதத்தில் மொத்தம் 4.5 லட்சம் பேரிடம் சுகாதாரத்துறை புற்றுநோய் பரிசோதனை செய்துள்ளது.  இந்த பரிசோதனையில், சிலருக்கு புற்றநோய் இருப்பது தெரியவந்த நிலையில்,  அவர்களுக்கான சிகிச்சை கொடுக்கபட்டுவருகிறது.  மேலும், இந்த 4 மாவட்டங்களில் சிலருக்கு கர்ப்பப்பை வாய், மார்பகம் மற்றும் வாய்வழி புற்றுநோய்களின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது போல மற்ற மாவட்டங்களிலும் பிரிசோதனை செய்வதற்கான ஆலோசனையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.  புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  PET ஸ்கேன் வசதிகள் 5 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக கடந்த 3 மாதங்களில் மாநிலம் முழுவதும் 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது"

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags :
Advertisement