For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#BharatMataKiJai முழக்கம் எழுப்பியதற்காக பாஜக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனரா ? - ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் என்ன நடந்தது ?

07:06 AM Nov 14, 2024 IST | Web Editor
 bharatmatakijai முழக்கம் எழுப்பியதற்காக பாஜக எம் எல் ஏக்கள் வெளியேற்றப்பட்டனரா     ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் என்ன நடந்தது
Advertisement

This news Fact Checked by ‘Boom'

Advertisement

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கம் எழுப்பியதற்காக பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது செய்தியின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக காணலாம்.

மத்திய பாஜக அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு (அரசியலமைப்பு பிரிவு 370 ) சிறப்பு அந்ததஸ்து நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்ட பிறகு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து 5வது நாளாக மேலாக அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அவையில் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சபாநாயகரின் அறிவுறுத்தலின் பேரில் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து பூம் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

சர்ச்சை வீடியோ - உண்மை சரிபார்ப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டதற்காக அவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாக பரவும் 43 வினாடி வைரல் வீடியோவில் இரண்டு கிளிப்புகள் உள்ளன. முதல் வீடியோவில், ஒரு எம்எல்ஏ 'பாரத் மாதா கி ஜெய்' எனும் கோஷத்தை எழுப்புவதைக் காணலாம். இதைத் தொடர்ந்து, அடுத்த கிளிப்பில், சட்டப் பேரவை காவலர்கள் எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பயனர், 'ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிட்டதால் வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏக்கள் . பாருங்கள் இதுதான் நம்நாட்டில் இந்துக்களின் நிலை. இனி ஒவ்வொரு அமைச்சரவையிலும் அவர்களின் (முஸ்லிம் பெரும்பான்மை) எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நடக்கும்? என யோசித்து பாருங்கள் என குறிப்பிட்டிருந்தது.

வைரலாக பரவிய இந்த வீடியோ தொடர்பாக உண்மைத் தன்மைக்கு உட்படுத்தியபோது அவை உண்மையில்லை என்பது நிரூபணமானது. நவம்பர் 8 ஆம் தேதி ஆஜ் தக்கின் செய்தி நிறுவனத்தின் வீடியோ அவை தெளிவாக உள்ளதை காணமுடிந்தது. ஜம்முகாஷ்மீர் சட்டப்பிரிவு 370ஐ மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் சபையில் முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பாஜக, தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, அவாமி இத்தேஹாத் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டனர். இதையடுத்து அமளியில் ஈடுபடும் எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தின் நான்காவது நாளில், அவாமி இத்தேஹாத் கட்சி எம்எல்ஏவும் பாரமுல்லா எம்பி பொறியாளர் ரஷீத்தின் சகோதரருமான குர்ஷித் அகமது ஷேக், சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ மறுசீரமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போஸ்டர்களை சட்டப்பேரவையில் காண்பித்தார். இதற்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அமர்வின் கடைசி நாளிலும் இந்த விவகாரம் நீடித்தது. குர்ஷித் அகமது மீண்டும் சட்டப்பிரிவு 370 மறுசீரமைப்பு தொடர்பான சுவரொட்டியை காண்பித்ததால் அவையில் சலசலப்பு ஏற்படவே பேரவைக் காவலர்கள் அவரை சபையில் இருந்து வெளியேற்றினர்.

இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முழக்கங்களை எழுப்பியதால் 12 பாஜக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மீதமுள்ள பாஜக எம்எல்ஏக்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து, பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைரலான வீடியோ குறித்து முழுமையாக புரிந்து கொள்ள Moneycontrol தளத்தில் வெளியான மூன்று மணி நேர நாற்பத்தேழு நிமிட வீடியோவில் இந்த முழு விவகாரத்தையும் காணமுடியும். அதிலும் குறிப்பாக 33 நிமிடங்கள் முதல் 38 நிமிடங்கள் வரை சட்டபேரவையில் நடைபெற்ற களேபரங்களை காணலாம். எனவே பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கம் எழுப்பியதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்படவில்லை என்பது நிரூபணமாகிறது.

முடிவு :

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கம் எழுப்பியதற்காக பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ போலியானது எனவும் அவை வெவ்வேறு சம்பவங்களை இணைத்து பரப்பப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Boom' and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement