For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவில் களையிழந்த #Onam... தமிழ்நாடு மலர் விவசாயிகள் கவலை!

03:05 PM Sep 12, 2024 IST | Web Editor
கேரளாவில் களையிழந்த  onam    தமிழ்நாடு மலர் விவசாயிகள் கவலை
Advertisement

கேரளாவில் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகையில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு போடப்படும் கோலம் மிக முக்கிய பங்கு வகிக்கும். ஓணம் பண்டிகை மொத்தம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ஒரு வகை, இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் கோலத்தை அழகுபடுத்துவார்கள். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்கும்.

இந்த சூழலில் சமீபத்தில் நடந்த வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படாது என கேரள அரசு அறிவித்தது. ஒவ்வொரு ஓணம் பண்டிகைக்கும் தமிழ்நாட்டில் இருந்து பூக்கள் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது கோவையில் இருந்து 110 டன் மலர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு வெறும் 15 டன் மலர் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செண்டு பூ ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு 30 கிலோ பூவே ரூ.150 முதல் ரூ.200 வரைதான் விற்பனையாகியிருக்கிறது என்று விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். இதே போல், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement