For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!

09:49 AM Dec 23, 2023 IST | Web Editor
கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை  ரூ 1 50 கோடிக்கு மேல் விற்பனை
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

Advertisement

சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை
சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும்.  இச்சந்தைக்கு சேலம்
மாவட்டமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.  வெள்ளாடுகள்,  செம்மறி ஆடுகள்,  மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.  இந்நிலையில்,  நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால் வீரகனூரில் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆடு,  மாடுகளை விற்பனை செய்வதற்காக ஏராளமான விவசாயிகள் சுமார் ஆயிரக்கணக்கான ஆடுகளையும், 500க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொண்டு வந்தனர்.

வழக்கமாக வீரகனூர் ஆட்டு சந்தைக்கு கறிக்கடை வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர்,  வாழப்பாடி,  தலைவாசல்,  சேலம்,  தம்மம்பட்டி
உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் இறைச்சி
கடைக்காரர்களும் கூடியதால் சந்தை களைகட்டியது.

மேலும் கிறிஸ்துமஸ் முன்னிட்டு பொதுமக்களும் குவிந்ததால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.  விறுவிறுப்பாக நடந்த ஆட்டு சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

ஆடுகள் தரத்திற்கேற்றவாறு உயிருடன் ஒரு கிலோ எடையின் மதிப்பளவில் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனையானது.  இதில் ஆடுகள் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள்  தெரிவித்தனர்.

Tags :
Advertisement