Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

களைகட்டிய திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு... 15 காளைகளை அடக்கி கார்த்திக் என்ற வீரர் முதலிடம்!

08:16 PM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த கே.டி எம் கார்த்திக் முதலிடம் பெற்றார்.

Advertisement

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும்
எல்லாவற்றிக்கும் முதன்மையாக பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா பார்க்கப்படுகிறது. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா இன்று (ஜன.16) காலை 8 மணியளவில் துவங்கியது.
இந்த போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை கிழக்கு ஆளுநர் செந்தில்
தொண்டமான், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு
வீரர்களை உற்சாகம் ஊட்டும் வகையில் மின் விசிரி, மோதிரம், குத்து விளக்கு
போன்ற உடனடி பரிசுகளை வழங்கினர்.

இதையும் படியுங்கள்:  ஆந்திரா: 250 வகை உணவுகளுடன் புது மாப்பிள்ளைக்கு விருந்து!

மொத்தம் 6 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 658
காளைகளும், சுமார் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.  தொழுவத்திற்கு பேரிகாட் வாயிலாக அழைத்து வந்த போதும், வாடி வாசலில் அவிழ்த்து விட்ட போதும் ஓடி வந்த காளைகள் முட்டியதில் மொத்தம் 73 பேர் காயமடைந்தனர்.  இதில் பலத்த காயமடைந்த 13 பேர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த கே.டி.எம். கார்த்திக் என்ற இளைஞர் 15 காளைகளை அடக்கி முதல் இடத்தை பெற்றதுடன் 'சிறந்த மாடு பிடி வீரர்' என்ற பட்டத்தை பெற்றார்.   அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.  கார்த்திக் 15 காளைகளை பிடித்து இருசக்கர வாகனத்தை பரிசாக பெற்றதற்கு காரணம் தனது பெற்றோர்களும் நண்பர்களும் கொடுத்த ஊக்கம் தான் என்று நியூஸ்7 தமிழுக்கு பிரத்தேக பேட்டி அளித்தார்.

Tags :
ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு2024JallikattuMaatu Pongalnews7 tamilNews7 Tamil UpdatesPongalPongal 2024Pongal CelebrationSooriyurTrichy
Advertisement
Next Article