For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!

01:28 PM Jun 15, 2024 IST | Web Editor
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.  எட்டயபுரத்தில் ரூ.4 கோடிக்கும், வீரகனூர் மற்றும் நாமக்கல்லில் தலா ரூ.2 கோடிக்கும் ஆடுகள் விற்பனையாகின. 

Advertisement

ஆறுமுகனேரி

தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலமானது.  வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தினங்களில் நடைபெறும் இந்த சந்தையில் பல வகையான ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.  இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி இன்று அதிகாலை முதல் ஆடுகள் விற்பனைக்கு துவங்கியது.

ஸ்ரீவைகுண்டம்,  ஏரல்,  திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  ஏரல் சிவகளை
உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்க
வந்திருந்தனர்.  ஆட்டு சந்தையில் தோராயமாக 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள
வெள்ளாடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.   இந்த ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.  இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்

இதே போல்,  நாமக்கல் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது.
இங்கு அதிகாலை 5 மணி முதல் ஆடு விற்பனை தொடங்கியது.  இதில் சேலம், கோவை, திருச்சி,  கிருஷ்ணகிரி,  தர்மபுரி,  கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.  இந்த சந்தையில், இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடிக்கு
ஆடுகள் விற்பனையானது.

அன்னூர்

மேலும்,  கோவை மாவட்டம் அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.  இந்த சந்தையில்,  ஆட்டுக் குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும்,  சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.  வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.  இங்கு ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வீரகனூர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரில் வாரந்தோறும்
சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் .  அந்த வகையில், இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில்,  ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுர ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.  இன்று ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Tags :
Advertisement