திருவிழாவில் முடிவாகும் திருமணங்கள் - 100 வருட பழமை வாய்ந்த திருமணத் திருவிழா..!
11:17 AM Jan 18, 2024 IST
|
Web Editor
இந்த ஆண்டு மழையின் காரணமாக வைப்பாற்றில் தண்ணீர் செல்வதால் இந்த பகுதியில் மணல்மேடு திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக அருகே உள்ள கோவில்கள் இடத்தில் மணல்மேடு திருவிழா நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தாங்கள் கொண்டு வந்த உணவுகளை மற்றவருக்கும் பரிமாறி உண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்று எந்த குடும்பத்தில் திருமண வயதில் ஆண் ,பெண் உள்ளனர் என்பதை விசாரித்து அதன் மூலம் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும். இந்த மணல்மேடு திருவிழாவிற்கு வரும் போதே எந்த குடும்பத்தில் திருமண வயதில் ஆண் பெண் உள்ளனர். அவர்களில் யார் வீட்டோடு சம்பந்தம் பேச வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு திருவிழாவிற்கு வருவது போல வந்து மணமகன் மணமகளை பார்த்து கொண்டு தங்களது இணையரை முடிவு செய்வது இந்த திருவிழாவின் சிறப்பாக உள்ளது. இந்த மணல் மேடு திருவிழா மூலம் பலருக்கும் திருமணம் நடந்துள்ளதாக கூறுகின்றனர் அந்த பகுதிவாசிகள். இந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் மணல்மேடு திருவிழாவை குடும்ப விழாவாக கொண்டாடி வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெறும் இந்த மணமேடு திருவிழாவை ஆண்டு தோறும் மக்கள் கொண்டாடும் வகையில் அரசு ஏற்பாடுகள் செய்து மணல் மேட்டு திருவிழாவை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
திருவிழாவில் முடிவாகும் திருமணங்கள் , 100 வருட பழமை வாய்ந்த திருமண திருவிழா எங்கே நடந்தது..? இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காணலாம்.
Advertisement
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மணல் மேட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதை தொடர்ந்து இந்தாண்டும் மணல் மேட்டுத் திருவிழா நடைபெற்றது. இந்த மணல் மேட்டுத் திருவிழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் அன்பை பரிமாறிக் கொண்டும் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, கண்ணாமூச்சி , பாண்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாண்டும்,
நடனமாடியும் மகிழ்ந்தனர்.
Next Article